வெள்ளி, 2 செப்டம்பர், 2016

வெண்பா

ஒரு வெண்பா எழுத தெரிந்திருக்க வேண்டிய அடிப்படைகள்: 
  • எழுத்து 
    • குறில் - ஒரு மாத்திரை கால அளவு 
    • நெடில் - இரு மாத்திரை கால அளவு
    • மெய் - அரை  மாத்திரை கால அளவு
    • ஔகாரக் குறுக்கம் - ஒன்றரை மாத்திரை (முதலெழுத்தாக மட்டுமே வரும் போது)
    • ஐகாரக் குறுக்கம் - ஒன்றரை மாத்திரை (முதலெழுத்தாக வரும் போது), ஒரு மாத்திரை (இடையிலோ இறுதியிலோ வரும் போது)
    • குற்றியலிகரம், குற்றியலுகரம் - அரை மாத்திரை 
    • மகரக்குறுக்கம் - மகர மெய் குறுக்கம் - கால் மாத்திரை 
    •  ஆய்தக்குறுக்கம் - கால் மாத்திரை 
  • அசை
    • நேரசை - ஒரு குறில் எழுத்து அல்லது நெடில் எழுத்து, தனியாகவோ மெய் எழுத்துடன் சேர்ந்தோ வருவது நேர் அசை.
      • குறில் 
      • குறில் + மெய் 
      • நெடில்
      • நெடில் + மெய் 
    • நிரையசை - குறில், நெடில் ஆகிய இரண்டும் தொடர்ந்து வருவதும் இரண்டு குறில் எழுத்துகள் தொடர்ந்து வருவதும், இவ்விரண்டின் பின் மெய் எழுத்து வருவதும் நிரை அசை.
      • இரு குறில்கள் 
      • இரு குறில்களும் மெய்யெழுத்தும்
      • குறிலும் நெடிலும் 
      • குறிலும் நெடிலும் மெய்யெழுத்தும்
  • சீர் 
    • ஓர் அசைச் சீர் 
      • நேர் = நாள் 
      • நிரை = மலர் 
      • நேர் + குற்றியலுகரம் (நேர்பு) = காசு  (ஈற்று சீராக மட்டும் வரும்)
      • நிரை + குற்றியலுகரம் (நிரைபு) = பிறப்பு (ஈற்று சீராக மட்டும் வரும்)

    • ஈரசைச் சீர் - இயற்சீர் / ஆசிரியச்சீர் / ஆசிரிய உரிச்சீர் / அகவற்சீர் 
      • நேர் + நேர் = தே.மா 
      • நேர் + நிரை = புளி.மா 
      • நிரை + நேர் = கூ.விளம் 
      • நிரை + நிரை = கரு.விளம் 
    • மூவசைச் சீர் - உரிச்சீர்
      • காய்ச்சீர் :
        • நேர் + நேர் + நேர் = தே.மாங்.காய் 
        • நேர் + நிரை + நேர் = புளி.மாங்.காய் 
        • நிரை + நேர் + நேர் = கூ.விளங்.காய் 
        • நிரை + நிரை + நேர் = கரு.விளங்.காய் 
      • கனிச்சீர் 
        • நேர் + நேர் + நிரை = தே.மாங்.கனி 
        • நேர் + நிரை + நிரை = புளி.மாங்.கனி 
        • நிரை + நேர் + நிரை = கூ.விளங்.கனி 
        • நிரை + நிரை+ நிரை = கரு.விளங்.கனி 
    • நாலசைச் சீர் - பொதுச்சீர் 
      • தண்பூ - கடைசி இரு சீர்கள் - நேர் (தண்) + நேர் (பூ)
        • நேர் + நேர் + நேர் + நேர் = தே.மாந்.தண்.பூ 
        • நேர் + நிரை + நேர் + நேர் = புளி.மாந்.தண்.பூ 
        • நிரை + நேர் + நேர் + நேர் = கூ.விளந்.தண்.பூ 
        • நிரை + நிரை + நேர் + நேர் = கரு.விளந்.தண்.பூ 

      • தண்ணிழல் - கடைசி இரு சீர்கள் - நேர் (தண்) + நிரை (நிழல்)
        • நேர் + நேர் + நேர் + நிரை = தே.மாந்.தண்.ணிழல் 
        • நேர் + நிரை + நேர் + நிரை =புளி.மாந்.தண்.ணிழல்  
        • நிரை + நேர் + நேர் + நிரை = கூ.விளந்.தண்.ணிழல் 
        • நிரை + நிரை + நேர் + நிரை = கரு.விளந்.தண்.ணிழல்
        •  
      • நறும்பூ - கடைசி இரு சீர்கள் - நிரை  (நறும்) + நேர் (பூ)
        • நேர் + நேர் + நிரை + நேர் = தே.மா.நறும்.பூ 
        • நேர் + நிரை + நிரை + நேர் = புளி.மா.நறும்.பூ 
        • நிரை + நேர் + நிரை + நேர் = கூ.விள.நறும்.பூ 
        • நிரை + நிரை+ நிரை+ நேர் = கரு.விள.நறும்.பூ 

      • நறுநிழல் - கடைசி இரு சீர்கள் - நிரை  (நறும்) + நிரை (நிழல்)
        • நேர் + நேர் + நிரை + நிரை = தே.மா.நறு.நிழல் 
        • நேர் + நிரை + நிரை + நிரை = புளி.மா.நறு.நிழல் 
        • நிரை + நேர் + நிரை + நிரை = கூ.விள.நறு.நிழல் 
        • நிரை + நிரை+ நிரை + நிரை = கரு.விள.நறும்.பூ 

  • தளை 
    • செய்யுள்களில் அருகருகே வரும் சீர்களுக்கு இடையேயான தொடர்பு தளை.
    • நிலைச் சீர் - வருஞ் சீர் 
    • இரு சீர்களுக்கிடையேயான தளையின் இயல்பு நிலைச்சீரின் வகை, அதன் இறுதி அசை, வருஞ்சீரின் முதல் அசை என்பவற்றில் பெரிதும் தங்கியுள்ளது.
    • ஆசிரியத்தளை - ஆசிரியப்பாவிற்கு உரியது 
      • நேர் ஒன்றா ஆசிரியத்தளை 
        • மா முன் நேர் வரின் 
      • நிரை ஒன்றா ஆசிரியத்தளை 
        • விள முன் நிரை வரின் 
    • வெண்டளை - வெண்பாவிற்கு உரியது
      • இயற்சீர் வெண்டளை 
        • மா முன் நிரை வரின் 
        • விள முன் நேர் வரின் 
      • வெண்சீர் வெண்டளை 
        • காய் முன் நேர் வரின் 
    • கலித்தளை - கலிப்பாவிற்கு உரியது
      • காய் முன் நிரை வரின் 
    • வஞ்சித்தளை - வஞ்சிப்பாவிற்கு உரியது
      • நிலைச்சீர் கனி 
      • ஒன்றிய வஞ்சித்தளை 
        • கனி முன் நிரை  வரின்  
        • (நிலைச்சீரில் ஈற்றசை நிரை - வருஞ்சீரில் நிரை  - ஒன்றிய) 
      • ஒன்றா வஞ்சித்தளை 
        • கனி முன் நேர் வரின்
        • (நிலைச்சீரில் ஈற்றசை நிரை - வருஞ்சீரில் நேர் - ஒன்றா)
  • அடி 
    • இரண்டு சீர் அடி - குறளடி 
    • மூன்று சீர் அடி - சிந்தடி 
    • நான்கு சீர் அடி - அளவடி 
    • ஐந்து சீர் அடி - நெடிலடி
    • ஆறு/ஏழு/எட்டு சீர் அடி -  கழிநெடிலடி 
    • ஒன்பது/பத்து சீர் அடி - இடையாகு கழி நெடிலடி
    • பதினொன்று முதல் பதினாறு வரை சீர்கள் கொண்ட அடி - கடையாகு கழி நெடிலடி
  • தொடை
    • மோனை - சீர் மோனை, அடி மோனை 
      • முதல் சீரின் முதல் எழுத்தோடு அடுத்து வரும் சீர்களில் ஒன்றிலோ பலவற்றிலோ உள்ள முதல் எழுத்து ஒன்றி வருவது.
      • தனி உயிர்க்கு தனி உயிரே மோனையாக வரும்.
        • அ - ஆ - ஐ - 
        • இ - ஈ - எ - ஏ 
        • உ - ஊ - ஒ - ஓ 
      • ஒரு குறிப்பிட்ட மெய் மேல் ஏறிய உயிருக்கு அதே மெய் மேல் ஏறிய உயிரே மோனையாக வரும். விலக்குகள்:
        • ச - த 
        • ஞ - ந 
        • ம - வ 
    • எதுகை - சீரெதுகை, அடியெதுகை 
      • சீரின் முதல் எழுத்து அளவொத்து இருக்க, இரண்டாம் எழுத்து முதலிய மற்ற எழுத்துக்கள் ஒலி ஒத்து வருவது.
    • இயைபு 
      • அடியின் இறுதி (கடைசி சொல்லோ கடைசி எழுத்தோ) ஒன்றி வருவது.
    • முரண்
      • அடிதோறும் சொல்லாலும் பொருளாலும் முரண்படுவது. 
    • அளபெடை 
      • எழுத்துக்கள் தமக்குரிய மாத்திரைகளுக்கு அதிகமாக அளபெடுத்து (நீண்டு) ஒலிப்பது அளபெடை
    • அந்தாதி
      • ஒரு அடியில் ஈற்றில் அமையும் சீர், அசை அல்லது எழுத்து, அடுத்துவரும் அடியின் தொடக்கமாக அமைவது அந்தாதித் தொடை.
      • அடுத்தடுத்த செய்யுள்களில் இத் தொடர்பு இடம்பெறின் அதுவும் அந்தாதித் தொடையே. அதாவது ஒரு செய்யுளின் இறுதிச் சீர், அசை அல்லது எழுத்தை அடுத்துவரும் செய்யுளின் முதலில் வரும் வகையில் அமையின் அதுவும் அந்தாதித் தொடை எனப்படும்.
      • எழுத்தந்தாதி, அசையந்தாதிசீரந்தாதிஅடியந்தாதி.
    • இரட்டைத் தொடை
      • செய்யுள் ஒன்றின் ஒரு அடியில் முழுவதும் ஒரே சொல்லே அதன் சீர்களாகத் திரும்பத் திரும்ப வருமாயின் அது இரட்டைத் தொடை எனப்படும். 
      • எனினும் இச் சொல் எல்லா இடங்களிலும் ஒரே பொருளிலேயே வரவேண்டும் என்பதில்லை. வெவ்வேறு பொருள்களிலும் வரலாம். 
    • செந்தொடை 
      • மோனை, எதுகை, இயைபு, முரண், அளபெடை, அந்தாதி, இரட்டை போன்ற எவ்வகைத் தொடையும் இல்லாமல், அவற்றில் உள்ள சொற்களின் இயல்பான தன்மையினால் அழகுற அமைவது செந்தொடை எனப்படுகின்றது
  • தொடை விகற்பங்கள் 
    • எட்டுத் தொடைகளிலே முதல் ஐந்து தொடை ஒவ்வொன்றுக்கும் அவை பாவிலே அமைந்து வருகின்ற இடங்களைப் பொறுத்து, எட்டு வகையான வேறுபாடுகள் யாப்பிலக்கண நூல்களிலே சொல்லப்பட்டுள்ளன. இவை யாப்பிலக்கணச் சொற் பயன்பாட்டு வழக்கில் “விகற்பங்கள்” எனப்படுகின்றன.
    • மேற் கூறிய எட்டு விகற்பங்களும் வருமாறு.
      • அடி
      • இணை (1,2 சீர்களில் வருதல்),
      • பொழிப்பு  (1,3 சீர்களில் வருதல்),
      • ஒரூஉ (1,4 சீர்களில் வருதல்),
      • கூழை (1,2,3 சீர்களில் வருதல்),
      • மேற்கதுவாய்  (1,3,4 சீர்களில் வருதல்)
      • கீழ்க்கதுவாய் (1,2,4 சீர்களில் வருதல்)
      • முற்று (1,2,3,4 சீர்களில் வருதல்)
    • மோனை, எதுகை, முரண், அளபெடை, இயைபு ஆகிய தொடைகளில் எட்டுவகையான விகற்பங்கள் ஏற்படும்போது மொத்தம் நாற்பது தொடை விகற்பங்கள் உண்டாகின்றன. இவற்றுடன் விகற்பங்கள் இல்லாத அந்தாதி, இரட்டை மற்றும் செந்தொடைகளும் சேர்ந்து நாற்பத்து மூன்று ஆகின்றது.

வெண்பாவிற்கான  இலக்கணம்:
  • வெண்பா
    • செப்பலோசை 
    • இயர்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை
    • குறள் வெண்பா 
      • ஈரடிகள்
      • முதல் அடியில் நான்கு சீர்களும் (அளவடி), இரண்டாவது அடியில்  மூன்று சீர்கள் (சிந்தடி)
    • சிந்தியல் வெண்பா 
      • மூவடிகள் 
      • முதல் இரண்டு அடிகள் அளவடி, ஈற்றடி சிந்தடி 
      • இன்னிசைச் சிந்தியல் வெண்பா
        • தனிச்சொலின்றி
      • நேரிசைச் சிந்தியல் வெண்பா
        • இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்று
    • நேரிசை வெண்பா
      • நான்கு அடிகளை உடையதாக இருத்தல்.
      • இரண்டாவது அடியில் தனிச்சொல் வருதல்.
      • நான்கு அடிகளும் ஒரே வகையான எதுகை உடையனவாகவோ அல்லது முதல் இரண்டு அடிகளும் ஒருவகை எதுகை உடையனவாக இருக்க, அடுத்த இரண்டும் வேறுவகை எதுகை உடையனவாகவோ இருத்தல்.
    • இன்னிசை வெண்பா 
      • நான்கு அடிகளைக் கொண்டு, நேரிசை வெண்பாவுக்கு உரிய இலக்கணங்கள் அமையாத ஏனைய வெண்பாக்கள்.
    • பஃறொடை வெண்பா
      • நான்கு அடிகளுக்கு மேல் அதிகப்பட்சம் பன்னிரண்டு அடிகள் வரை அமைந்த வெண்பா
      • பஃறொடை வெண்பாக்களிலும் நேரிசை, இன்னிசை வேறுபாடுகள் உண்டு 
    • கலிவெண்பா
      • பன்னிரண்டு அடிகளுக்கு மேல்.
      • இன்னிசைக் கலிவெண்பா, நேரிசைக் கலிவெண்பா என இருவகைப்படும். 
      • இன்னிசைக் கலிவெண்பா 
        • பதின்மூன்று அடிகள் முதல் பல அடிகளில் தனிச்சொல் பெறாமல் வரும். 
      • நேரிசைக் கலிவெண்பா
        • இரண்டிரண்டு அடிகள் ஒவ்வொரு எதுகையும்தனிச்சொல்லும் பெற்று கண்ணி என்ற பெயரில் பலவாக வரும்.


  • வெண்பா எழுதும் போது கவனிக்கவேண்டியவை விதிமுறைகள் 
    • வெண்பாவில் இயற்சீர் நான்கும் (தேமா புளிமா கருவிளம் கூவிளம்) வெண்சீர் நான்கும் (தேமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் கூவிளங்காய்) மட்டும் வரும்.
    • ஈற்றடி சிந்தடியாகவும் (மூன்று சீர்கள் கொண்டது சிந்தடி) மற்ற அடிகள் அளவடிகளாகவும் (நான்கு சீர்கள் கொண்டது அளவடி) வரவேண்டும்.
    • வெண்பாவின் அளவடிகளில் பொழிப்பு (1,3ஆம் சீர்களில்) மோனை வரவேண்டும். சிறுபான்மை ஒரூஉ(1,4 ஆம் சீர்களில்) மோனையும் வரலாம். 
    • சிந்தடியாகிய ஈற்றடியிலும் பொழிப்பு மோனை வரவேண்டும்.
    • ஈற்றடியின் இறுதிச்சீர் நாள் மலர் காசு பிறப்பு இவற்றிலொன்றைப் பெற்று முடிதல் வேண்டும்.
    • குறள் வெண்பாவிற்கு சில தொடை தொடர்பான விதி தளர்த்தல்கள் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக