அந்தாதி என்றால் முன் பாட்டின் அந்தம் (முடிவு), அடுத்தப்பாட்டின் ஆதி (ஆரம்பம்) - நமக்கு தெரிந்த விசயம் தான்.
அபிராமி அந்தாதி கேட்கும் போது, முதல் பாடல் முடியும் முன்னே மனம் அடுத்தப்பாடலுக்கு தாவிடுது.
இதுல இந்த "தங்கைச்சி - தங்கச்சிலை" அந்தாதி அப்படியே நச்!
நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து,
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய், நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய், என்ன பேறு பெற்றேன்.--
தாயே, மலைமகளே, செங்கண் மால் திருத் தங்கைச்சியே.
தங்கைச்சியே! - திரு தங்கைச்சி - திரு(மாலின்) தங்கை - மாலின் திரு (சிறப்பு/அழகு மிக்க) தங்கை. சிலேடை - அபாரம்!!
[சந்தி வந்ததினால் அதை மாலின் திருத் தங்கைன்னு தான் படிக்கணுமா?]
அடுத்தப் பாட்டுல இன்னும் தங்கைச்சியை பத்தி என்ன சொல்லப் போறாரோன்னு மனசுல நினைக்கும் போதே, இதோ எப்படி தடம் மாறுகிறார் (track change).
தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத
வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகனகச்
செங் கைக் கரும்பும், மலரும், எப்போதும் என் சிந்தையதே.
தங்கச்சிலை கொண்டு - தங்க சிலை - சிலைன்னா வில் - பொன்மலையை வில்லாக கொண்டு (பொன் மலைன்னா மேருமலைன்னு முந்தின பதிவுல மேற்கோள் கொடுத்திருக்கேன்).
தங்கச்சிலை கொண்டு - தங்கச்சிலை - தங்கச்சிற்பம் போன்ற அபிராமியை கொண்டவன்ன்னு பொருள் எடுத்துக்கலாமா? சிலேடையாக!
அபிராமி! அபிராமி!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக